Tuesday, May 15, 2018

29. பத்ரிநாத் யாத்திரை 5 - விசால் பத்ரி


பத்ரிநாத் யாத்திரையின் நான்காம் நாளான 4.5.18 (வெள்ளிக்கிழமை) அன்று காலையில் பிபல் கோடியிலிருந்து கிளம்பி ஜோஷிமத் தரிசனம் முடித்து,   யோகபத்ரி ஆலய தரிசனமும் முடித்தபின் சுமார் 11 மணி அளவில் பத்ரிநாத் வந்து சேர்ந்தோம்.  

யோகபத்ரியிலிருந்து கிளம்பும்போதே, 'பத்ரிநாத்தில் குளிர் அதிகமாக இருக்கும், ஸ்வெட்டர் அணிந்து கொள்ள வேண்டும்' என்று சிலர் எச்சரிக்கை செய்தனர். ஆயினும் நாங்கள் பத்ரிநாத் சென்றடைந்தபோது அங்கே குளிர் இல்லை. 



பிற்பகலுக்கு மேல்தான் குளிர ஆரம்பித்து மாலையில் குளிர் சற்று அதிகமாகி, இரவில் நடுக்கும் குளிர் ஆனது. வெப்பம் 1 டிகிரி என்று சொன்னார்கள். (மறுநாள் காலை வரை நீடித்த குளிர், சுமார் ஒன்பது மணிக்கு சூரியன் வெளிப்பட்டதும் 'பகலவனைக் கண்ட பனி போல' என்ற பழமொழிக்கு ஏற்ப  உடனே மறைந்து விட்டது.)

பத்ரிநாதில் இறங்கியதும்,பொருட்களை நாங்கள் தங்க வேண்டிய விடுதீயில் வைத்து விட்டு, உடனே கோவிலுக்குச் சென்றோம். அந்த நேரத்தில் கூட்டம் அதிகம் இல்லை என்பதால் பத்ரிநாராயணனை நன்கு சேவிக்க முடிந்தது. சந்நிதிக்கு அருகில் சென்று கண் குளிரச் சேவிக்க முடிந்தது இறைவனின் அருள்தான்.


மலைகள் சூழ, கீழே பள்ளமான இடத்தில் அலகனந்தா பாய, உயரத்தில் அமைந்திருக்கும் பத்ரிநாத் கோவிலின் தோற்றம் பரவசமூட்டக் கூடியது.

பத்ரிநாத் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் விசால் பத்ரி அல்லது பத்ரி விசால் என்று அழைக்கப்படுகிறார்.

பத்ரிநாராயணன் தரிசனம் முடிந்ததும் விடுதிக்கு வந்து அறைகளில் பொருட்களை வைத்து விட்டு, மதிய உணவுக்குப் பின் இந்தியாவின் எல்லையோர கிராமமான, இந்தியாவின் கடைசி கிராமம் என்று அழைக்கப்படும் மானா கிராமத்துக்குச் சென்றோம்.  மானா சென்ற அனுபவம் பற்றி  பற்றி இன்னொரு (அடுத்த) பதிவில் எழுதியுள்ளேன்.


மாலை சுமார் ஏழு மணிக்கு  (நானும் இன்னொருவரும் மட்டும்) மீண்டும் 
பத்ரிநாராயணனை தரிசிக்கச் சென்றோம். இந்த முறை கூட்டம் சற்று அதிகமாக இருந்தாலும் அரைமணி நேரத்தில் தரிசனம் கிடைத்தது. ஆயினும் இந்த முறை சற்று தூரத்திலிருந்துதான் பெருமாளைப் பார்க்க முடிந்தது.

மறுநாள் (5.5.18 சனிக்கிழமையன்று) அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து, கோவிலுக்கும் அலகனந்தாவுக்கும் இடையே உள்ள தப்த் குண்ட் எனும் வெந்நீர் ஊற்றில் குளித்து விட்டுப் பெருமாளை சேவிக்கச் சென்றோம்.




 திருமஞ்சனம் (நீராடல்) முடிந்த நிலையில் பத்ரி நாராயணனின் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது.
















சுமார் 9 மணி அளவில் கங்கைக்கரையில் முன்னோர்களுக்குப் பிண்டம் அளிக்கும் சடங்கு.

தந்தை தாய் வழி உறவுகள், மனைவி, உடன்பிறந்தோர் வகை உறவுகள், நண்பர்கள், நாம் மறந்து போன உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவருக்கும் பிண்டம் வைத்து வழிபட்டோம்.


 பத்ரிநாத் தரிசனம் முடிந்ததும், மதிய உணவுக்குப் பின் விடுதியைக் காலி செய்து விட்டு, மலையிலிருந்து கீழ் இறங்கும் பயணத்தைக் தொடங்கினோம்.




திரும்பும் பயணத்தில் தரிசித்த  ஹனுமான் சட்டி, ஆதிபத்ரி, விருத்த பத்ரி, ரிஷிகேஷ், ஹரித்வார் ஆரத்திகள் ஆகியவை பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.


 பத்ரிநாத்தில் எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்கள் கீழே.




















நன்றி!

























No comments:

Post a Comment